Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நேற்று கொரோனா மிரட்டல்: கட்டுப்பாடு வருகிறது?…. புதிய அலெர்ட்…..!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முக கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் பல மாதங்கள் கழித்து நேற்று இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சீனாவில் வந்த இருவருக்கு தொற்று உறுதியானதால் தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கி விட்டதா என்ற அச்சம் எழுகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அவசர ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |