தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தொற்று ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் மூலமாக டெங்கு பரவலை கட்டுப்படுத்த முடியும் .
இதனை தொடர்ந்து அடுத்து வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மழைக்கால நோய்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் ஜெனரேட்டர் உள்ளிட்ட மின்சாதன வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் நோய் தொற்று ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த நடவடிக்கை எடுக்கவும் நடமாடும் மருத்துவக் குழு வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.