Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி செயல்படுகிறதா? – ஆய்வு செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக்கூறு பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை சி.பி.ஐ. இணை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி அர்ஜுன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், தடை செய்யப்பட்ட மூலக்கூறுகளைப் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் பட்டாசு ஆலைகள் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் இயங்கும் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்ததா? பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக் கூறுகள் பயன்படுத்தப்பட்டனவா? என்பது குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உண்மையைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை சிபிஐ இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |