நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி காலை ஆறு மணி முதல் 7:00 மணி வரையும் இரவு 7:00 மணி முதல் எட்டு மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பதற்கும் வெடிப்பதற்கும் அனுமதி. காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பனை செய்யவோ வெடிக்கவும் கூடாது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடங்களில் பட்டாசு அடிக்கக் கூடாது. வாகன நிறுத்துமிடம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பட்டாசு வெடிக்க கூடாது.
மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனக்குறைவாக பட்டாசு வெடிக்க கூடாது. குடிசைப் பகுதிகளில் மற்றும் மாடி கட்டிடங்கள் அருகில் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்க கூடாது. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக் கூடாது. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சி அல்லது நெருப்பை பயன்படுத்துவதை விட நீளமான ஊதுபத்தி உபயோகிப்பது ஆபத்துக்களை தவிர்க்க உதவும் உள்ளிட்ட 19 கட்டுப்பாடுகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.