பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், பன்றி காய்ச்சால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1044 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதிற்கு குறைவாக 42 குழுந்தைகளும், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 65 பேரும், 15 முதல் 65 வயதிற்குட்பட்டோர்கள் 192 பேரும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 69 பேரும் அடங்குவர்.
மேலும், 89 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் 264 பேர், அரசு மருத்துவமனைகளில் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும், எனவே பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை என்றார்.