152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டமாணனது 141 அடியை எட்டியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. அண்மையில் முல்லைப் பெரியாறு அணையில் 138 அடி இருக்கும்போதே தண்ணீர் திறக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் 141 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது. 152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. தற்போது அணையின் நீர்வரத்து 3,348 கன அடியாக உள்ள நிலையில் நீர்திறப்பு 2,300 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.