Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதுமட்டுமல்லாமல் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின்  நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, வேலூர், திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு, நெல்லை, செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |