Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளின் நிலை என்ன?…. ஒன்றிய அரசு அறிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளின் நிலை என்ன? என்பது குறித்த அறிக்கை ஒன்றை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 58,897 பள்ளிகள் உள்ளன. 37,579 அரசு பள்ளிகள், 8,328 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இணைய வசதியை பொறுத்தவரை 2019 முதல் 2020 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 31.95% பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. அதிலும் 17.95% அரசு பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |