Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை… அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ளதால், ஆறு நாட்களும் விடுமுறை இல்லாமல் வகுப…

இந்நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகள் ஆக அமைந்து உள்ள பள்ளிகளில் மட்டும் தேவைக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்தான் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகள் வழக்கம்போல நடைபெறும் என கூறியுள்ளது.

Categories

Tech |