தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குழந்தைகள் இடையே வைரஸ் ப்ளூ காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு மக்களின் வயிற்றை போக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் தமிழக அரசு இது குறித்து பரிந்துரைத்த விரைவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.