கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா அச்சுறுத்தி வந்தது. இதன் தாக்கம் தற்போது குறைந்ததால் மக்களும் நிம்மதியாக இருக்கிறார்கள். தற்போது தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “இது தொடர்பான முடிவுகளை பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்தாலோசித்து ஒரு முடிவு எடுப்பார்கள். அதன்பின் அவர்களிடம் இருந்து விடுமுறை அறிவிக்கலாம் என்று அறிவிப்பு வந்தால், நாங்கள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புவோம்” என்று கூறியுள்ளார்.