Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது…. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தினம் தோறும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் அங்கன்வாடி புதிய கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், எந்தப் பகுதிகளில் எல்லாம் மூன்று நாட்களுக்கும் மேல் காய்ச்சல் உள்ளதோ அங்கே மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்கப்படும். காய்ச்சல் குறித்து மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியம் இல்லை.இனி சுகாதாரத்துறை என்ன கூறுகிறார்களோ அதை ஏற்று அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |