தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனால் பொது தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் பருவத்தேர்வு 24ம் தேதியுடன் முடிவடைவதால் டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடுவதற்கு 10 நாட்கள் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.