Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. குழப்பத்தில் மாணவர்கள்…. அரசின் முடிவு என்ன?….!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதன்பின் மாணவர்கள் அனைவருக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் விதிக்கப்பட்ட வார கடைசி நாள் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு நிறுத்தப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனிடையில் தேர்தல் பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சென்னையில் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கான தேர்தல் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு தேர்தல் நடைபெற இருப்பதால் வருகிற பிப்.. 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்ற செய்திகள் வைரலாகி வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இது குறித்து அடுத்து வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |