புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில் திருவிழா காரணமாக ஏப்ரல்11 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பண்டிகைகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்ததன் காரணமாக பண்டிகைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மண்டகப்படி தாரர்கள் சார்பில் தினந்தோறும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற இருக்கிறது.
திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தையும் பக்தர்கள் இந்து சமய அறநிலையத் துறையினர் போன்றோர் செய்து வருகின்றனர். இந்நிலையில் முத்துமாரி அம்மனுக்கு பால், பழம், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக ஆராதனைகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதன்பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளச் செய்யும் காட்சி நடைபெறும். மேலும் இந்த நிகழ்ச்சிக்காக பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று தொடங்கி இருக்கிறது. ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதியன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான மாற்று பணி நாளாக வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வேலை நாளாகவும் வழக்கமாக வேலை நாளாக கொண்டுள்ள அரசு அலுவலர்களுக்கு அடுத்த நாள் ஏப்ரல் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலை நாள் ஆகும் என ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.