Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ரத்து… முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறியுள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. அரசு சார்பாக மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் பள்ளி திறக்கும் தேதியை ஒத்தி வைக்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பது சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |