தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திட்டமிட்டபடி 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியும், 12 ஆம் + வகுப்பு மாணவர்களுக்கு 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் 1-5 ஆம் வகுப்புகளுக்கு என்னும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜூன் 13ம் தேதி தொடங்கி வைக்கிறார். மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.