தமிழக அரசு கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் தற்போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் தான் இதற்கு காரணமாகும். இந்த நிலையில் 1 முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டுமே மே 14-ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை விடுமுறை எனவும் அதன் பிறகு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிக வேகத்தில் பரவி வருகிறது. இதனால் பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்குமா என்றும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமா எனவும் பல கேள்விகள் அரசிடம் வைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக திட்டமிட்டபடி ஜூன் 13 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை பராமரிப்பு மற்றும் முன்னேற்பாடுகள் பற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை தலைமை செயலாளர் வெ இறையன்பு வெளியிட்டிருக்கிறார். ஆனால் சேலம் மாவட்டத்தில் மட்டும் சில பள்ளிகள் எல்கேஜி வகுப்புகள் இரண்டு நாட்கள் கழித்து ஜூன் 15ம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது மற்றும் வகுப்புகள் அரசின் அறிவிப்பின்படி ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. அதிலும் தனியார் பள்ளிகளில் தான் இந்த தாமதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசு பள்ளிகளில் எல்கேஜி,யூகேஜி நடத்தப்படுவது பற்றி வேறு வேறு பத்திகள் அளிக்கப்படுவது பற்றி முறையாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பின் இந்த வகுப்புகள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.