தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழக முழுவதும் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றது.
ஒரு வாரம் கழித்து மாணவர்கள் வருகை தர உள்ளதால் பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதே சமயம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.