நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்கள் பள்ளிகளை திறந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தற்போது பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக அரசாங்கம் எப்போ வேண்டுமானாலும் பள்ளிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கும், அதை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறப்பதற்கு முன்பு தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூபாய் 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி திறப்பதற்கு முன்பு பொறுப்பாசிரியர் ஒருவரை நியமித்து பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும். பள்ளிகள் திறப்பதற்கு முதல் நாளில் தூய்மை பணி நடைபெறுவதை கல்வி அலுவலர் பார்வையிட வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் இருக்கும் அனைத்து முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.