Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு தூய்மை பணிகள் நடைபெறுவதை கல்வி அலுவலர்கள் பார்வையிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால் அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த அறிவிப்பை ரத்து செய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பதற்கு முன் பொறுப்பாசிரியர் ஒருவரை நியமித்து பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும். பள்ளிகள் திறப்பதற்கு முதல் நாளில் தூய்மை பணிகள் நடைபெறுவதால் கல்வி அலுவலர்கள் பார்வையிட வேண்டும். மேலும் தொற்று பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |