Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?… முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அவர் அறிவித்தார்.

இதனையடுத்தே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை முதல்வர் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அதனால் டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |