Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?… முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையும் போது பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் முழுமையாக குறையும்போது பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பெற்றோர்களின் கருத்தை அறிந்து தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இம்மாதம் இறுதி அல்லது ஜனவரி மாதம் பெற்றோர்களிடம் பள்ளி திறப்பு பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |