Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?…. வெளியான புதிய தகவல்…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்த கருத்துகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கும், 14417என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மாணவர்களுக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என 60 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இது பற்றிய அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் ஜூன் 20-ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களும் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடாதவர்களின் காரணத்தை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |