தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவுகளை எடுப்பதற்காக வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்தக் குழுவின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை என்பது நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் மற்றும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என பல்வேறு செய்திகள் வந்தபோது தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கு எந்தவிதமான ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் மத்திய கல்வி துறை அமைச்சகம் டிசம்பர் வரைக்கும் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளில் 1,6,9 இந்த மூன்று வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இணைய வழி வகுப்புகள் நடத்தலாமா ? என்றும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கின்றது.