தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை மாதத்தில் பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் 3 வது அலையை மனதில் கொண்டு முதலில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கிய பின் படிப்படியாக பிற வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.