தமிழகத்தில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டு தொடங்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் இன்னும் பல பள்ளிகளில் பாடங்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்து வருகின்றது. தற்போது வரை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி, மற்றும் பல பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுமா? என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பும் முயல வேண்டும். தனியார் பள்ளிகளில் தவணை முறையில் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக 40%, இரண்டாவது தவணையாக 35 சதவீத கட்டணம் செலுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.