தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக கொரோனா குறைவதால் பள்ளிகள் திறக்க கோரிக்கை எழுந்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ தெரிவித்துள்ளார். விரைவில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் டிசி இல்லாமல் எந்த வகையான பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது என்றும், கட்டணம் செலுத்தாமல் படித்துவிட்டு வேறு பள்ளியில் சேரும் மாணவர்களால் நிர்வாகம் பாதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.