தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக கொரோனா குறைவதால் ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஜூலை 16ல் பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் பள்ளி திறப்பு குறித்து பெற்றோர் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.