Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. கட்டாயம் இதை செய்யுங்க….!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா நன்கு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறந்ததும் உடனடியாக பாடங்களை நடத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால் 1.1 சதவீத மாணவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இவர்களுக்கு அரசு உறுதுணையாக விளங்கவேண்டும். மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் மனம்விட்டுப் பழகும் வகையில் மகிழ்ச்சியான விளையாட்டுகளுடன் தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |