Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது. மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வழங்க வேண்டும். பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை. விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்கவும்.

Categories

Tech |