Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. ரூ.38.37 கோடி மானியம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.19.18 கோடியை பள்ளிக்கல்வித்துறை விடுவித்துள்ளது. 6,177அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் நடப்பு கல்வி ஆண்டுக்கு ரூ.38.37 கோடி மானியம் வழங்கப்படும். அந்த மானியத் தொகையில் மின் கட்டணம் செலுத்த கூடாது. மேலும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் கட்டிடங்களை பழுதுபார்க்கும் பணிகளை முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |