தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர்.மா சுப்பிரமணியன், தமிழகத்தில் வகுப்புகள் தொடங்கினாலும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்கள் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படும்.
மேலும் 95% பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.