தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இடைநிற்றல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என விளக்கம் கேட்கிறோம். மேலும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்படும். நீட் தேர்வு முறையாக நடைபெறவில்லை என்பதற்கு மகாராஷ்டிராவில் நடந்த மோசடி உதாரணம் என்று அவர் கூறியுள்ளார்.