தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நவம்பர் 1 முதல் 1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் அதை அடுத்து முன்னேற்பாடுகள் தொடர்பாக வரைகின்ற 12ஆம் தேதி பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், கல்வித்துறை இயக்குனர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். வகுப்பறைகள், இருக்கைகள் விவரங்களை ஆலோசனையின் போது ஒப்படைக்க கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.