தமிழகத்தில் 9-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 1-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது. கொரோனா தொற்று நெறிமுறைகளின்படி ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள பல பள்ளிகளில் உயர் வகுப்பு மாணவர்கள் சமூக இடைவெளியுடன் உட்கார ஆரம்ப வகுப்பறைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டால் போதுமான இடவசதி இல்லாமல் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 12,13 ஆகிய இரு தேதிகளில் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு சென்று வருபவர்களின் கூட்டம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்களில் அதிகமாக இருக்கும். இதற்கு மத்தியில் மாணவர்களும் பேருந்துகளில் பள்ளிக்கு சென்று வருவதில் கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் பின்னர் அடுத்த மாதம் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது.
கொரோனா காலகட்டங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1,2,3,4 ஆகிய தேதிகளில் பயணிகளின் கூட்ட நெரிசலில் சரியாக இடைவெளியை பின்பற்றுவது சவாலாக இருக்கிறது. இதனையடுத்து கிறிஸ்மஸ் புத்தாண்டு என பேருந்து நிலையங்களிலும் வணிக பகுதிகளிலும் ஏராளமான கூட்டம் இருக்கும். அதனால் அடுத்த 2 மாதங்களில் பொது இடங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பண்டிகை நாட்களில் கருத்தில் கொண்டு அடுத்த 2 மாதங்களில் தொடக்கப் பள்ளிகளை திறக்க முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.