தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கல்வியை எளிதில் அணுகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல் நலம் சரியில்லாத மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு தர வேண்டும். எந்தெந்த நாளில் நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்பதை அறிவிக்க வேண்டும் என்று கூறி வகுப்புகளை தொடங்க உத்தரவிடக் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது.