Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கு தடை?…. அரசு சொன்ன பதில்…. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக அரசு 9 ஆம் வகுப்பு முதல 12-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.மேலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது .

18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கண்டு பிடிக்கவில்லை. ஆனால் நோய்த்தொற்றின் 3 வது அலை அதிகமாக குழந்தைகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அனைத்து மாணவர்களும் பள்ளிக்குச் சென்றால் சமூக இடைவேளையை பின்பற்ற முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். அதனால் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதிகள் துரைசுவாமி, முரளி சங்கர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எந்தப் சிக்கல்களும் இல்லாமல் மகிழ்ச்சியாக பள்ளி சென்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளது. அதனால் பள்ளிகள் திறக்க தடை விதிக்கக்கூடாது என்று விவாதிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் மனுதாரர் விரும்பினால் அரசிடம் புதிதாக மனு அளிக்கலாம் என்று கூறி வழக்கை நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Categories

Tech |