தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பது தொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்து அரசு பள்ளிகளில் நேரடி ஆய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட மற்றும் வட்ட பள்ளி கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முதன்மை, மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் வருகின்ற இருவத்தி 7ஆம் தேதிக்குள் நேரடி ஆய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.