Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு…. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம்

கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சமைத்த சத்தான உணவை வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முன்னதாக, அட்வகேட் ஜெனரல் ஆஜராகி 9- 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதில் ஏற்கனவே 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் நவம்பர் 1ஆம் தேதி 1-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதால், அவர்களுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, நீதிபதி பிடி. ஆதிகேசவலு கொரோனா போன்ற மோசமான நிலையை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான அவசரகால மாற்றுத் திட்டங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அவசர காலத்தில் சத்துணவு வழங்குவதற்கான மாற்று திட்டங்கள் என்ன உள்ளது என்பதைப் பற்றியும், சத்துணவு வழங்கப்பட்டது பற்றியும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு 4 வாரத்துக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர் .

Categories

Tech |