Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?… வெளியாகும் முக்கிய அறிவிப்பு… முதலமைச்சர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவித்துள்ளார். மேலும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் பள்ளிகள் திறப்பதற்கு இது சரியான தருணம் அல்ல என்று பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கேபி.அன்பழகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆலோசனை முடிவடைந்த பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |