Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்…. வெளியான புது ரூல்ஸ்…!!!

இந்தியாவில் ஒமிக்ரான்  வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டது தொடர்ந்து இந்த நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக பள்ளிகளில் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன் படி,

1 முதல் 8 வகுப்புகளுக்கு சுழற்சிமுறையில் பள்ளிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்தப்படலாம்.

மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது கட்டாயம் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

அதிக வெப்பநிலை இருக்கும் நபர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.

மாணவர்கள் முக கவசம் அணிந்து இருப்பது கட்டாயம்.

ஆசிரியர்கள் முக கவசம்  அணிந்து மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உறுதி, கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க இறைவணக்கம் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் தவிர்க்க வேண்டும்.

பள்ளிகளில் நீச்சல் குளங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக மூட வேண்டும்.

அரசு வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |