தமிழகத்தில் திட்டமிட்டபடி வருகின்ற 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதிலும் பள்ளிகள் திறப்பது பற்றி இன்று பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அவ்வாறு தமிழகம் முழுவதிலும் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியுள்ளனர். பெற்றோர்கள் தெரிவித்துள்ளார் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு அடுத்த கட்ட முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பள்ளிகள் திறப்பது பற்றி கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.
அதிலும் சில தனியார் பள்ளிகள் செல்போன் மூலமாக பெற்றோர்களை தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்டனர். இதனை அடுத்து தமிழக அரசு திட்டமிட்டபடி வருகிற 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பள்ளிகளுக்கு வந்து செல்லலாம் என்று அறிவிக்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.