தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் முடிவடைந்து மே 14ம் தேதியிலிருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் பிளஸ் டூ மற்றும் பிளஸ் 1 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் 31ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிகள் நலச்சங்கம் திட்டமிட்டபடி ஜூன் மாதமே பள்ளிகள் திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து பள்ளிகள் சங்கம் அரசுக்கு வைத்த கோரிக்கை மனுவில், பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்ததை அடுத்து சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்வார்கள் .மீதமுள்ள ஆசிரியர்கள் ஓய்வில் தான் இருப்பார்கள். எனவே அரசு அறிவித்தபடி ஜூன் 13 முதல் பள்ளிகளை திறக்க வேண்டும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்ததால் கற்றல் இழப்பை சந்தித்தனர். மீண்டும் அந்த தவறை நாம் செய்யக்கூடாது. எனவே மாணவர்களுடைய கற்றல் இழப்பை தவிர்க்கும் விதமாக அரசு அறிவித்தபடி வரும் ஜூன் மாதம் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.