Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்….. வெளியான முக்கிய தகவல்….!!!!!

தமிழகத்தில் தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்து ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதற்கட்டமாக மாநகராட்சி மாநகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த காலை சிற்றுண்டியை முடிக்க 30 நிமிடங்கள் ஆகும் என்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே பள்ளிக்கு வர வேண்டியிருக்கும். எனவே காலை சிற்றுண்டி காரணமாக பள்ளி நேர மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வந்த பின்னர் மாணவர்கள் காலையில் எட்டு முப்பது மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும். பின்னர் சிற்றுண்டி வழங்கப்பட்டதையடுத்து 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |