Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு இது கட்டாயம்?…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அதனால் மாணவர்கள் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேறு அறிவிப்புகள் எதாவது வெளியாகுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |