தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த விடுமுறை ஜூன் 12ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 13 ஆம் தேதியிலிருந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறந்ததும் முதல் ஐந்து நாட்கள் மாணவ மாணவியர்களுக்கு நல்லொழுக்க வகுப்பு நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். பொது தேர்வு எழுதாத மாணவர்கள் ஜூலை, செப்டம்பர் ஆகிய மாதங்களில் தேர்வு எழுத வேண்டும். அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.