Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அவர், தமிழகத்தில் திட்டமிட்டபடி 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.

இந்த குறிப்பிட்ட தேதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட ஒருசில காரணங்களால் மாற்றம் இருந்தால் அது குறித்து முன்னரே அறிவிக்கப்படும். அதன்படி பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருந்தால் தெரியப்படுத்தவோம். மேலும் பொது தேர்வு எழுதாத மாணவர்கள் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்வு எழுத வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |