தமிழகத்தி கொரோனாவை அடுத்து ஒமைக்ரான் பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வெளி மாநிலங்களில் மட்டுமே பரவி வந்த ஒமைக்ரான் தற்போது தமிழகத்திலும் நுழைந்துள்ளது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இதனால் முன்புபோல பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா? என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்படுமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.