தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளை மூடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, ரூபாய் ஆயிரம் உதவித்தொகை என பல சலுகைகளை அறிவித்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான சலுகைகளை அரசு ரத்து செய்துள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் அவை தனியார் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.